வசந்தமே வந்துவிடு

அப்பா இல்லாத வீடு
அமங்கலியான அம்மா
ஒல்லிய தேகம்
ஒடுங்கிய வயிறு
உழைத்து களைத்த
உறவற்ற ஜீவன்
நித்தமும் கூழு
நீர்த்த சோறு
எப்போதாகிலும்
சுடக் கஞ்சிக்கு
ஆறப் பொறுக்காமல்
அடம் பிடிக்கும் தம்பி
வாயில் விரல் சூப்பி
அம்மாவின் முந்தியை
இழுத்தபடி தங்கை
கூரை காணா குடிசை
மழை பெய்ஞ்சா
வீடெல்லாம் தண்ணி
கித்தானுக்குள் நாங்கள்
காட்டில் விறகு வெட்டி
காப்பேறி போன
கைகளுடன் நான்
வாழ்கை எனும் ஓடம்
கரை சேர்க்குமோ
சேர்க்காதோ எங்களை
வானம் தொட்டுவிடும்
தூரம்தான்-ஏழையின்
வறுமை போக்க
வந்து விடு வசந்தமே
வா வா வசந்தமே!!!!!

எழுதியவர் : உமாபாரதி (8-Nov-18, 6:15 pm)
சேர்த்தது : உமா பாரதி
பார்வை : 54
மேலே