கருப்பு நண்பன்

குடும்பங்கள் கூட்டாக வாழவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்
கூப்பிட்டால் கூட்டாக வரவேண்டும் என்ற ஒற்றுமையை புரிந்துகொண்டேன்
ஒரு முறைக்கு பலமுறை ஓசை எழுப்புவாய்
அதற்க்கு பல அர்த்தங்கள் இருக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன்

மரக்கிளையில் வீடுகள்
மறைவே இல்லாத சுவர்கள்
நிறத்தில் ஒற்றுமை காட்டினாய்
நீங்காத வேற்றுமையை போக்கினாய்

சமத்துவம் புரிந்துகொண்டேன்
சமாதானம் தெரிந்துகொண்டேன்
நிழலும் கருப்புதான் அதற்க்கு நிஜம் இருக்கவேண்டும்
நான் நிஜமாகவே கருப்புதான் என் நிறங்கள் நிஜமாக இருக்கின்றன என்று புரியவைத்தாய்

ஆம் ஒற்றுமை என்பதை எனக்கு புரியவைத்த காகமே நீயே என் கருப்பு நண்பன்

BY DEAR GUYS

எழுதியவர் : (8-Nov-18, 6:18 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : karuppu nanban
பார்வை : 47

மேலே