வலி துற நையாண்டி மேளம் இரண்டாம் பாகம்

வலி துற


மருமகளின்
தனிச்சுதந்திரம்

குடும்பத்தின் மொத்த
சுதந்திரத்திற்கு எதிர் ;

மகனின்
மனஅலைகள்

பொங்கும்
கடலலைக்கு நேர் ;

மனைவியின்
அறிவு ஓட்டம்

பலநேரம்
கவலைக்கிடம் ;

அடக்கம் அதிகம்
பயின்றதினால்

அதிகார உறவினர்
ஏவலுக்குப் பலி ;

உலகியல் சரியாகப்
புரியாததால்

சாமர்த்திய நண்பர்
கேலிக்குக் குறி ;

நாளிதழ் திறந்தால்

வஞ்சனையில் வீழும்
கணவன் மனைவியர் தலை -

வாழ்க்கை இனிமையானதே
வலி துறந்து வாழக் கற்றால் !

********

எழுதியவர் : Dr A S KANDHAN (9-Nov-18, 12:11 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 22

மேலே