ஆடாமல் ஆடினாள்

ஆடாமல் ஆடினாள்
அழகெல்லாம் சூடியவள்
ஓவியத்தை வரைந்தாற்போல்
காவியத்தை எழுதிடவா
பூவையவள் படிப்பாளா?
அவளை படித்துத்தானே
கவியாறு ஓடுகிறது
மாலையெனும் பொழுதினிலே
பூவையவள் வருகையிலே
வானம் சிவந்திருக்கும்
கடல் கலங்கியிருக்கும்
வெயில் அடங்கியிருக்கும்
அழகு உயிர்பெற்றிருக்கும்
வயது இருக்கையிலே
அழகு மிளிர்ந்திருக்குதே
அழகும் திமிரும்
அவளது இருக்க கண்களே

எழுதியவர் : கவிராஜா (9-Nov-18, 1:00 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 280

மேலே