இலங்கையில் நடந்த கொலைகள்---------------- பொன் குலேந்திரன் கனடா

இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சியிலும் அதன் பின்னரும் நடந்த கொலைகள் பல. அவைற்றில் சில இக் கதை தொகுப்புக்குள். கொலைகள் இன்னும் நடந்து கொண்டே இருகின்றன. கொலைகள் குரோதம், அரசியல் , பொறாமை, காமம,. களவு,. ஆணவக் கொலை., சாதிக் கொலை, அதிகார துஸ்பிரயோகம், வகுப்பு மோதல்கள், நம்பிக்கைகள், பாரபட்சங்கள், தவறான சிந்தனை, அறநெறி, , அடக்குமுறை, ஆழ்ந்த கோபம் , ஈகோ. கண்மூடித்தனமான விழிப்புணர்வு. அடிமைத்தனம், போதைப்பொருள், உளவியல் கோளாறுகள் போன்ற காரணங்களால் இடம்பெறுகின்றன. குற்றம் புரிந்தவர்களை தீவீரமாக விசாரித்து, சட்டத்தின் முன் நிறுத்தப் படுகிறார்கள் ஒரு குற்றம் நடந்த சம்பவத்தில் ஒருவர் மடுமல்லாமல் பலர் சேர்ந்து திட்டம் போட்டு செயல் படுத்துகிறார்கள் ஒரு குற்றச்செயலோடு இணைந்து, குற்றவாளிகள்,பொலீஸ் . வழக்கறிஞர்

நீதியரசர், ஜூரிகள்,முடிவில் தீர்ப்பு. குற்றச்செயல்களுக்கு தண்டனையானது பல வழிகளில் உள்ளடங்கியது: சமூக சேவை, அபராதத் தொகை, சொத்துக்களை இழப்பீடு, சிறைவாசம், நிறுவன சிகிச்சை, ஊக்கம், இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை, சவுக்கடி போன்றவை. பெரும் குற்றமான கொலைக்கும் பொதை மருந்து வியாபாரம் கூட்டு கற்பளிப்பு போன்றவைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது

இத் தண்டனைகள் சில இக்கதைளில் உள்ளடங்கும் இக் கதைகளை எழுத உதவிய காலம் சென்ற நீதியரசர் A C Alles அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களுக்கு நன்றி. அவைகளை கருவாக வைத்து, புனைவும் கலந்து எழுதிய கதைகள் இவை

Number of Pages: 337

--------------

ஈழத்திலிருந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பொன் குலேந்திரன் அவர்கள்.

தொலை தொடர்பு துறையில் (Telecommunication) சிரேஷ்ட பொறியியலாளராக இலங்கை,ஓமான், துபாய். அபுதாபி . சார்ஜா,லண்டன், அமெரிக்கா, ஒன்டாரியோ கனடா ஆகிய நாடுகளில் தொழில் புரிந்தவர். ஒன்டாரியோ மிசிசாகா நகரில் உள்ள பீல் முது தமிழர் சங்கத்தின் தலைவராக நான்கு வருடங்கள் இருந்து சமூக சேவை செய்தவர். இப்போதும் சங்கத்துக்கு உதவி வருகிறார். பத்து வயதில் எழுத் தொடங்கியவர். இரு மொழி எழுத்தாளர். இவரது நூல்களை Amazon.. இல் பார்க்கலாம்

சமீபத்தில் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இவரது ‘முடிவு’ என்ற கதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. போட்டிக்கென்று வந்த 440 கதைகளில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இப்பெருமை கனடா வாழ் முது தமிழர்களைப் போய் சேரும்.

இக்கதை கல்வி தரப்படுத்தல் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மாணவன் ஒருவனைப் பற்றியது.

இவரது “காலம் ” என்ற 20 அறிவியல் சிறுகதைகள் தொகுப்பு டிசம்பரில் ஓவியா பதிப்பகம் வெளியிடுகிறது

இது தவிர “முதியோர் முத்துக்கள் முப்பது” என்ற சிறு கதைகள் தொகுப்பு ஒன்றை தயாரித்துக்கொண்டிருக்கிறார். பல நாடுளில் இருந்து முதிய எழுத்தாளர்கள் எழுதிய சிறு கதைகள் கொண்டது.

எழுதியவர் : (9-Nov-18, 1:06 pm)
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே