ஓய்வின் நகைச்சுவை 46 காலை நீராகாரம்

லக்ஷ்மி: என்ன ரெட்டீர் லைப் எப்படி?

சாந்தி: வர வர இவர் பண்ற அலம்பல் தாங்கமுடியலே. நாலடியார் பற்றி காணொளி போடுறாராம். அதுனாலே அவங்க சாப்பிட்டது போல மண்பானை யிலேயே பழைய சாதம், பச்சமிளகாய், சாம்பார் உள்ளி, நெல்லிக்காய் பூண்டு, மர கிண்ணம்னு ஆரம்பிச் சுட்டார்.

லக்ஷ்மி: பேசாமே நூலிலே மாவிலையை கட்டி உடுங்கோனு கொடுத்திர வேண்டியதுதானே

சாந்தி: அந்த ரிஸ்க் எடுக்கக்கூடாது உடனே மனுஷன் போட்டோ எடுத்து நெட்லே போட்டிடுவார். எதை போடுறது போடக்கூடாதுனு பாக்கிறதில்லை சரியான 8-4-7 எபெக்ட்டீ. உங்க வீட்டுக்காரர் எப்படி( நாளை )

( வெளிப்படை என்கிற பெயரில் எல்லா புகைப்படங்களையும் வலைத்தளத்தில் போட்டுவிடலாகாது )

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Nov-18, 7:48 am)
பார்வை : 101

மேலே