மழை

விவசாயின் குரல் ..........‌.....
மழையே !
என் மண் வந்து சேர்வாயா ?
மழையே !
என் வயல் செழிக்க செய்வாயா ?
மழையே !
என் பசியை தீர்க்க வருவாயா ?
மழையே !
என் பஞ்சம் போக்க வருவாயா ?
இல்லை !
வரமாட்டாயா ?
உன்னை நம்பியே ...
உழைக்கும் மனிதன் நானே !
நீ வரவில்லை என்றால் ...
என் உழைப்பும் வீணே !
நான் பாவம் செய்தேனா ?
இல்லை !
மக்கள் பசி தீர்க்க மறந்தேனா ?
இடி மின்னல் சத்தம் கேட்டு ...
பல ஆண்டு ஆனதே !
எந்தன் வயலோ உன்னை பார்த்து ...
பல ஆண்டு ஆனதே !
பசியோடு பட்னி சேர்ந்து ...
நான் இங்கு வருந்துகிறேன் !
உன்னாலே !
உன்னாலே !
நீ வரவேண்டும் என் மண்ணிற்கு ...
நீரை தரவேண்டும் என் வயலிற்கு ...
இடி மின்னல் சத்தம் கேட்டு ...
நான் !
இன்பமுற்று வாழ வேண்டும் ...

எழுதியவர் : M. Santhakumar . (11-Nov-18, 5:09 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : mazhai
பார்வை : 3752

மேலே