என்னவள் பார்வை

உதய சூரியன் ஒளி
மனதின் சிந்தனைக்கு புத்துணர்ச்சி தரும்
தீய எண்ணங்கள் போக்கி
உயர்ந்த எண்ணங்கள் சேர்க்கும்
தூய்மையை நாடவைக்கும் , நலன்கள் எல்லாம் சேர்க்கும்

என்னவளே அதிகாலையில்
மலர்ந்த உன் விழிகளின் பார்வை
என்மீது வந்திறங்கும் போது
நீ எனக்கு உதய சூரியனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Nov-18, 12:15 pm)
Tanglish : ennaval parvai
பார்வை : 288

மேலே