தீபாவளி நல்வாழ்த்துக்கள்

குழந்தைகள் முதல் முதியவர் வரை
கொண்டாடி மகிழும் தீபாவளி
வறியவர்களும் வசதி படைத்தவர்களும்
கொண்டாடி மகிழும் தீபாவளி

கவலைகள் நீங்கிட மனக் கசடுகள் தொலைத்திட
காலையில் எழுந்து தலைமுழுக்கெடுத்து
கடவுளைத் தொழுது பெரியோரை வணங்கி
கொண்டாடி மகிழும் தீபாவளி

புத்தாடை அணிந்து புதுப் பொலிவு கொண்டு
பட்டாசு வெடித்து பலகாரங்கள் உண்டு
பாதைசாரிகளுடன் அதை பண்பாய் பகிர்ந்து
கொண்டாடி மகிழும் தீபாவளி

சாதிமத சர்ச்சைகள் துறந்து
சண்டை சச்சரவுகள் மறந்து
சமதர்ம சமாதான வெண்கொடி பறந்து
கொண்டாடி மகிழும் தீபாவளி

இல்லம் முழுதும் வண்ண விளக்குகள் ஏற்றி
இருளுடன் தீமையை இல்லாது ஒழித்திட
கொடுப்பதில் இன்பம் கோடி என உணர்த்த
கொண்டாடி மகிழும் தீபாவளி!

வேட்டுச் சத்தம் முடிந்தவரை குறைத்து
காற்று மாசுபடுவதை இயன்றவரை தவிர்த்து
சுற்றுச்சூழல் காக்க சூளுரைத்து
கொண்டாடி மகிழும் தீபாவளி!



கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (12-Nov-18, 2:29 pm)
பார்வை : 11

மேலே