தெளிவாய் சிந்தியுங்கள்

·
தெளிவாய் சிந்தியுங்கள்
தீர்க்கமான முடிவெடுங்கள்

ஒளியாய் ஊடுருவுங்கள்
ஓங்காரத்துடன் ஒன்றிடுங்கள்

வளியாய் சக்தி பெறுங்கள்
வன்கொடுமை வேரறுங்கள்

துளியாய் பனித்திடுங்கள்
துயர் கண்டு இரங்கிடுங்கள்

சங்காய் முழங்கிடுங்கள்
சரிதை படைத்திடுங்கள்

கலசமாய் வீற்றிருங்கள்
கற்புநெறி போற்றிடுங்கள்

சொற்பமாய் பேசிடுங்கள்
சொல்வழியே நடந்திடுங்கள்

மனிதனாய் வாழ்ந்திடுங்கள்
மண்ணுயிரைக் காத்திடுங்கள்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (12-Nov-18, 2:35 pm)
பார்வை : 182

மேலே