காதல்

என்முன் வந்து நிற்கிறாய்
நான் உன்னைப் பார்க்க
நீயும் என்னைப் பார்கின்றாய்
நம் விழிகளுக்கு மட்டும்தான் தெரியும்
இந்த பார்வை எனக்கும் உனக்கும்
உண்டான காதலின் ஆரம்பமென்று

உன்னழகையே கண்டு மெய்மறந்து
உன்னழகுக்கோர் கவிதைப் புனைந்தேன்
உன் காதலன். கவிஞன் நான்
எழுதியதை உனக்கு படித்தும் காட்டினேன்
நீயோ ஓர் பேசாமடந்தையாய்
சிலைபோல் மௌனமாய் நின்றிருந்தாய்
ஒரு புத்துணர்ச்சித்தரும் புன்னகை
இப்போது உந்தன் முகம் அதில்
மெல்ல இசையாய் இழைந்துவந்தது
உந்தன் அடக்கமான சுவாசம் !

எனக்கும் உனக்கும் இடையில் காதல்
அதில் பேச்சு நான் , அதில் மூச்சல்லவோ நீ பெண்ணே

இதோ, நான் இப்போது உன்னை காதலிக்கும்
ஓடும் நதியானேனே இல்லை நதிபோல் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-18, 2:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே