துணிவொன்றி என்னொடு சூழாது எழுநெஞ்சே – நாலடியார் 55

இன்னிசை வெண்பா

கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழா(து) எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு. 55

- துறவு, நாலடியார்

பொருளுரை:

இளமைப் பருவமும் வீணே கழிந்தது, உடனே நோயோடு கிழத்தனமும் வரும், ஆதலால், துணிதல் பொருந்தி என்னோடு ஆராயாமல் புலன்களின் வழியிற் செல்கின்ற நெஞ்சமே! நல்வழி உண்டாக நீ என்னுடன் வருகின்றனையா?

கருத்து:

புலன்வழிச் செல்லுதலைத் தவிர்த்து மனத்தை அறவழியிற் செலுத்துதல் வேண்டும்.

விளக்கம்:

கழிந்தன்று - கழிந்தது; இன்னே - உடனே என்னும் பொருட்டு; இது நெஞ்சத்தின் இயல்பு கூறித் திருத்தியபடியாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-18, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே