ஒரு படி உயர்ந்தவள்

காவியங்கள் கணக்கெடுக்காத
உயர்ந்தவர்களை
அலசிப் பார்த்த போது
அகப்பட்டவள் தான் ஊர்மிளை

யாரிவள்....................?

கம்பனின் சிந்தையைக்
கவராத காரிகை
நம் சிலரின் ஞாபகத்தின்
ஓரத்தில் இருக்கும் கோதை
கணவனுக்குப் பின்னே
போகத் தெரியாத பேதை

ஆமாம்...............!
இராமாயணத்து இலக்குவனின்
மனையாள் தான் இந்த ஊர்மிளை
பிரிவினில் சுடுமோ காடு என்று
தத்துவம் பேசத் தெரியாதவள்
பதின்நான்கு வருடங்களில்
ஒரு முறையேனும்
கணவனின் ஞாபகத்திற்கு வராதவள்
மைத்துனனுக்கு காவலாய்
கட்டியவன் போக
கையசைத்துவிட்டு
கனவுகளோடு காத்திருந்தவள்

அசோக வனத்திலே சீதை சிறையிருக்க
அரண்மனையிலே தவம் கிடந்தவள்
ஆழமாய் பார்த்தால் சீதையை விட
வலிகளை அதிகம் சுமந்தவள்
சுருங்கக் கூறின் சீதையை விட
ஒரு படி உயர்ந்தவள்..................!

எழுதியவர் : (14-Nov-18, 7:58 pm)
பார்வை : 165

மேலே