வாழ்க்கை எனும் மலையேற்றத்தில்

கீழ்வானம் வெளுக்குமுன்
மேற்கு வானைத் தொட எத்தனிக்கும் ஒரு மலையில்
தனியே தனித்து விடப்பட்டேன்.
என்னைப் போல் பலரும் விடப்பட்டிருக்க கண்டேன்.

மலையுச்சியை கண்ணில் காட்டாமல் மறைத்தது வெண்மை கலந்த கருமை நிறம் கொண்ட பனி.
கால்களால் தரை தடவி ஏற்றம் உணர்ந்து மலையுணர்ச்சிக்கு போக நினைத்து எண்ணம் என்னும் ஏட்டில் எழுதி வைத்துக் கொண்டேன்.

சிறிது சிறிதாக பாதை துலங்க மேல்நோக்கி நகர்ந்தவண்ணம் இருந்த என்னை எட்டி பிடித்தன இருசோடி கைகள்.
ஒன்று அந்தப்பக்கம் போகாதே,
அது தவறான பாதை.
இந்தப்பக்கம் வா என்றிட,
மற்றொன்று அதன் பேச்சிக் கேட்காதே,
என்னுடன் வந்திடு. என்றிட,
திடமாக அறியப்பட்ட பாதையில் பல குழப்பம் வர,
தெரிந்த பாதையும் மறைந்துவிட்டது.

சுற்றிலும் பல கைகள் என்னை நோக்கி நகர்ந்துவர பயமே மேலிட்டு மிரட்சியோடு பார்க்கிறேன்.
என்னை நெருங்கிய கைகளெல்லாம் என்னைப் பிடித்து அவற்றின் பக்கம் இழுக்க எப்பக்கம் நானும் செல்வேன்.

தீர்க்கமான எண்ணமும்,
பலமான மனமும் தெளிவில்லாத சூழலில்
திகைத்து நின்று மறைந்து போகின்றன,
தன்னால் தீர்மானிக்கப்பட்ட பாதையில் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தால்.
பல நல்லவர்கள் திசை மாறிப்போவது இவ்வழியே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Nov-18, 6:50 pm)
பார்வை : 1385

மேலே