காதல்

கடலுக்கு கரையோடு காதல்
காற்றுக்கு கதிரோடு காதல்
நிலவுக்கு முகிலொடு காதல்
நீருக்கு மண்ணோடு காதல்

வரப்புக்கு வயலோடு காதல்
வண்டிற்கு மலரோடு காதல்
பாட்டுக்கு இசையோடு காதல்
பார்வைக்கு விழியோடு காதல்.

சங்கிற்கு நாதத்தின்மீது காதல்
சலங்கைக்கு ஒலிமீது காதல்
இரவுக்கு பகல்மீது காதல்
இயற்கைக்கு வசந்தத்தின்மீது காதல்.

பேனாவுக்கு மையொடு காதல்
பேப்பருக்கு எழுத்தோடு காதல்
கற்பனைக்கு வார்த்தையோடு காதல்
கவிதைக்கோ என்மீது காதல்.!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (15-Nov-18, 7:44 pm)
சேர்த்தது : Princess Hasini
Tanglish : kaadhal
பார்வை : 792

மேலே