சில கணங்கள்

என் பேனாவும் காகிதமும் எனைப் பார்த்து கோபம் கலந்த ஏளன சிரிப்பாய் சிரிக்க..,
என்னையே ஒருமுறை நான் புதிதாய் பார்த்துக் கொண்டேன்..!
உன் உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு மட்டும் நான் விதியல்ல.., நான் மெழுகின் நகலல்ல..
சகாராவின் செல்கள் என்றது..! ஆம்..., என் கைகள் மறந்ததன் விளைவு உன் ஏளனச் சிரிப்பாய்.., என் குற்ற உணர்ச்சி கரசக் காட்டு கள்ளிச் செடியாய் உரசிப் போனது..!
என் வெற்றுச் சிரிப்பில் பதிவாகும் சில துளிகளை பருக.., நானும் வருவேன் என்றன என் காகித அருவி...!,
கனவுகளோடு கலைநயமும் ஓவியமாய் மெருகேற்ற வருவேன் என்றது என் பேனாவின் கூர்முனைகள்..!
என் உணர்வுகளிலும்,கவலையோடும் வந்த எழுத்துச் சுமையை கண்ணீரோடு சேர்த்து தாங்கிக் கொண்டது...!,
ஏதும் புரியா வெறுமை கணங்களில்.., என்னோடு பயணித்தது என் பேனாவும் காகிதமுமே..!
இதோ
வந்துவிட்டேன்... உன்னிடமே...!
மனதைக் காலத்தின் கருணைக் கொலை செய்யும் மனிதர்களின் காலடியில் சிக்கித் தவிக்க இந்தப் பெண்மை இனியும் தயார் இல்லை..!
நிறமற்ற என் காகிதமும்.., பல வண்ணங்களில் என் மனக்கண்ணாடியை காட்டும் எழுதுகோலும் போதும்.., என் பாலைவன பயணத்திற்க்கு,..
இந்தச் சரித்திரத்தை சரிவரப் புரிந்திடவும்..!

எழுதியவர் : சரண்யா (15-Nov-18, 9:21 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : en sila kannkal
பார்வை : 255

மேலே