கூகிள் ம் விடலைகளும்

" கூகிள் "ம் விடலைகளும்
**********************************************
சின்னஞ்சிறு வயதினரே கூகிளைத் திறக்காதீர்
நன்நெறிக் கோட்பாட்டு விசயங்கள் இருந்தாலும்
மன்னிக்க முடியாத ஆபாசமும் வெகுநிறைவே
தன்னந் தனியிருக்க நோக்காதீர் அதைத்திறந்தே

கொஞ்சிடும் அத்தையாம் விஞ்சிடும் காமத்தில்
எஞ்சிய பொழுதுக்கு கெஞ்சிடும் சித்தியாம்
மஞ்சமிட மருமகனை தஞ்சமிடும் மாமியாராம்
பஞ்சணைப் பாடலுக்கு பரிதவிக்கும் அக்காவாம்

துஞ்சாது காத்திருந்து துச்சமாய் நெறியொதுக்கி
நஞ்சொத்த செயலுக்கு அச்சாரந் தனைப்போட்டு
அஞ்சாது அதுநிகழ்த்த நெஞ்சமதைக் கல்லாக்க
பிஞ்சுச் சிறுவரினம் மிஞ்சாது அவரிடத்தே

தறிகெட்ட உணர்ச்சிகள் நெறியற்ற உறவுகள்
முறையற்ற வழியினில் காமத்தின் காவலர்கள்
குறையற்ற கறை ஏற்று தரைதட்டும் தோணிகள்
நரைகண்டு நின்றாலும் நிறைகாணா மிருகங்கள்

கதைத்திடும் பலவரிகள் பலான மொழியோடு
சதைத்திறன் அதுகாட்டி ஈர்த்திடும் சித்திரங்கள்
அதைத்திற அதைத்திற எனத்தூண்டும் ஆர்வங்கள்
பதைத்திடும் பெற்றோர்கள் வெம்பிடும் பிஞ்சின்ங்கள்
- - - - - - - - - - - - - - - - - ( ஆதலால் ) - - - - - - - - - - - - - -- - -
சின்னஞ்சிறு பிஞ்சுகளே கூகிளைத் திறக்காதீர்
தனித்திருக்கும் வேளையிலே அதைநோக்க அலையாதீர்


- --- (இது ஒரு சமுதாய விழிப்புணர்வுப் புனைவு )---

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Nov-18, 3:57 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 108

மேலே