இழைந்தோடும் மெல்லிய எல்லைக்கோடு

தென்றலும் புயலும் ஒன்றென்பேன்
ஆதாரம் காற்றென்பதால் ,

சுடரும் காட்டுத்தீயும் ஒன்றென்பேன்
தொடக்கம் சிறு தீப்பொறியென்பதால் ,

மழை சாரலும் பெருவெள்ளமும் ஒன்றென்பேன்
தொடக்கம் சிறு துளியென்பதால் ,

சிறுபூண்டும் பெரும்காடும் ஒன்றென்பேன்
தொடக்கம் சிறு விதையென்பதால் ,

இரவும் பகலும் ஒன்றென்பேன்
இடைவெளி சிறு ஒளி என்பதால் ,

ஆண்மையும் பெண்மையும் ஒன்றென்பேன்
அடிப்படை ஒரு உயிர் என்பதால் ,

இழைந்தோடும் மெல்லிய எல்லைக்கோடு
அழிந்தோடும்போது ....
ஒன்றென்பேன் எல்லாமே ஒன்றே என்பேன் .

எழுதியவர் : (16-Nov-18, 6:31 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 56

மேலே