காதலியே

பைசா நகரத்து ஓவியமே
பைந்தமிழ் வண்ண காப்பியமே
கயல் போன்ற கருவிழியோ
காவியங்கள் பல சொல்லுதடி
வில் ஒத்த புருவம் எனை
வீழ்த்திவிட துடிக்குதடி
முகத்தை மூடி ஏனடி
மூச்சு முட்ட கொல்கிறாய்
அங்கும் இங்கும் பார்க்கிறாய்
அகத்தை எடுத்தே செல்கிறாய்
புறத்தால் எனக்கு என்ன பயன்
புதைத்துவிடு எனை உயிரோடு
கள்வெறி கொண்ட வண்டாய்
காளை எனை மாற்றிவிட்டாய்

எழுதியவர் : உமாபாரதி (16-Nov-18, 11:24 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : kathaliye
பார்வை : 494

மேலே