மெய் உறக்கம்

திசையறியா திசை
முட்புதர் காடு
அரக்கர்களின் அரவணைப்பு
கொடிய விஷப் பூச்சிகளுடன் உரையாடல்
முள் படுக்கை
ஆகாயம் தொடும் ஆசை
அரை வயிற்றுக்கு மட்டும் பூசை
முறுக்குது மீசை
தடுக்குது மேசை
மேலெழும்பும் விசை
சப்தமில்லா இசை
கண்களில் வெறித்தண்ணீர்
கைகளிலோ வெற்றுப் பாத்திரம்
நரம்புகள் புடைக்குது
நாட்கள் நகர நன்றாக நடிக்குது
வண்ணக் கலவையில் முங்கிய சுவர்
இரங்கல் செய்தியை ஏங்கி நிக்குது
பரமசிவன் கழுத்துப் பாம்பும்
குரல் வலையை நசுக்கிப் பாக்குது
கானலாய் பகலும்
கனலாய் இரவும்
உறக்கமே சாத்தியமற்ற உலகில்
மெய் உறக்கம் சாத்தியமே ..
சாத்தியம் இல்லை என்பது சாத்தியமே ?!

எழுதியவர் : குணா (17-Nov-18, 7:39 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : mei urakam
பார்வை : 74

மேலே