மகாத்மா காந்தி

அமைதியின் உருவமே !
அறவழியின் ஆசானே !
இந்தியரின் இதயனே !
ஈகை பண்பில் சிறந்தவனே !
உண்மையின் உதிரமே!
உப்பு சத்தியாகிரகத்தின் தலைவனே !
போர்பந்தரின் புனிதனே ! .....
கதர் அணிந்த கர்ணனே!
கண்ணியத்தின் தலைவனே !
மதம் இல்லா இறைவனே !
கரையில்லா மனிதனே !
நீதி காக்கும் அரசனே !
உலகம் போற்றும் உத்தமனே !
புத்திலிபாயின் மகனே ! .......



மேலாடையின்றி வாழ்ந்தே !
மேல்நாட்டு சுற்றி வந்தாரே!
ஏழைகளின் மேலாடைக்காக சூளுரைத்தாரே !...
விடுதலை வேட்கை கொண்டு !
வீறுநடை போட்டாரே !
அடிமைத்தனம் கொண்டவனை !
தன் அறசொல்லால் வென்றாரே ! ....
பகைகள் படைக்கொண்டு வந்தபோதும் !
தன் அறப்படையால் அவர்களை எதிர்த்தாரே !.....
ஆயுதம் கொண்ட வெள்ளையனை !
அகிம்சை முறையில் துரத்தினாரே !...
உடலை தொடரும் !
நிழலைப் போல !
உண்மையை தொடர்ந்து !
வாழ்ந்தாரே ! ....
உள்ளதை சொல்லும் !
உன்னத மகான் !
மகாத்மா என்று பெயர் !
கொண்டாரே !....
அன்பாலும் !
அறத்தாலும்!
அகிம்சையாலும் !
இந்தியக் கொடியை !
பிரகடனம் செய்தவரே ! ....
இந்திய நாட்டில் இன்பம் நிலைக்க !
இறுதிவரை உழைத்த !
அந்த மாமனிதர் !
புதுதில்லியில் இயற்கை எய்தினாரே !....

எழுதியவர் : M. Santhakumar . (17-Nov-18, 8:21 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 234

மேலே