அழகு
அவள் அழகை விட அழகு...... தமிழ் அவளை விட அழகு..... அழகான அவளை வருணிக்க... தித்திக்கும் தேன் தமிழால்..... வார்த்தை தேடும் விந்தை ...... சிந்தையேல்லாம் நிறைந்தவளை...கன்னிதமிழ் கொண்டு அழகாக்கும் மன சிற்பம் ....... அழகுக்கு மிஞ்சியவளை தேன் தமிழால் வர்ண தூரிகையிடும் நயமான ஓவியம்.......,.....
ஆம்..அவள் அழகை விட அழகு..... அவளை வார்க்கும் என் செந்தமிழ் அவளை விட அழகு...