கவிஞரின் காதலி
என் அன்பு இளங்கவியே
காலை வணக்கம்
நீ நலமா, உன் குடும்பத்தார் நலமா!
தமிழ்நாடு நலமா!
காதலியை காண
உன் காதலியை காண காலையிலேயே
வந்து விட்டாய் இங்கு
தவறில்லை, அதில் தப்பும் இல்லை
உன் வயது, வாலிப
வயது
வாட்டுகிறது அப்படி
உன் சிந்தனையில்
நிறைந்தவள் வருவதற்கு முன்
உன் அழகிய காதலி
வருவதற்கு முன்
உன் அலங்கார கவிதை
அவள் முன் நீ வாசிப்பதற்கு முன்
சில விசயங்கள்
கூறுவேன்
தயவு செய்து கேள்
காதலி, உன் காதலியை
காதலி
அதற்கு முன் நண்பா
நீ கட்டாயம் இவர்களை
காதலிக்க வேண்டும்
உனக்கு உயிர் கொடுத்த
அன்னையை முதலில் காதலி
முழுவதுமாக காதலி
உலகத்தை முதலில்
காட்டிய
உன் தந்தையை காதலி
தோளோடு தோள் நின்ற உன்
நண்பனை காதலி
உனக்கு தமிழ் வழங்கிய
தமிழ் ஆசிரியரை
காதலி
உணவின்றி
உதவியின்றி
தெருவோரம் வாடும்
ஏழைகளை காதலி
பெற்ற பிள்ளைகள்
அடித்து துரத்தி
முதியோர் இல்லத்தில்
சேர்க்கபட்ட
முதியவர்களை காதலி
உன் தாய் மொழி
தமிழை காதலி
உன் தமிழ்நாட்டை
காதலி
உன்னை காதலி
உன் உறவை காதலி
இந்த கடலை காதலி
என்னை காதலி
முடிந்தால்
என் எழுத்தை
காதலி
பின்
உன் காதலியையும்
காதலி
- பாலு.