தொழவும் சேவை வரி

உடுப்பதும் உழைப்பதும் இங்கு சுதந்திரமாய்
சேமிப்பதற்கும் சேமிப்பை பெறவும் - தினம்
சேவை வரி செலுத்த வேண்டும்
ஆளை அழைக்கவும் ஆலயம் செல்லவும்
அதிகப்படியான ஆடம்பர வரி வேண்டும்
கழைக்கூத்தாடியும் கடைநிலை ஊழியனும்
இங்கு கடன்காரன் என்ற பட்டத்துடன்
"கார்ப்பரேட் " முதலாளிகளோ காசின் மூலதனமாய்
கிழக்கிந்திய கம்பெனியால்
கீழ் இறக்கப்பட்ட நாடு - இன்று
கிழிக்கப்பட்ட கீற்றாய் காற்றில் பறக்க
அறுபது ஆண்டுக்கும் மேலாயும்
ஆற்றுப் படுத்தக் கூட ஆளில்லாப் பிள்ளையாய்
குட்டித்தீவெல்லாம் கெட்டிக்காரத்தனமாய்
சுட்டிப் பிள்ளை போல் பட்டொளி வீச
பாரம்பரிய நாடோ பேரிடி விழுந்த மரம் போல்
காரணம் எதுவென்றாலும் கடந்து போகட்டும் இனி
சொர்ணம் மிகுந்த நாடாய் மற்றுவதே நம் பணி
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (19-Nov-18, 9:34 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 139

மேலே