எரியும் துயரம்

எம் சோழமண்டலம்
க(த)ண்ணீரில்
மிதக்கின்றது…

ஈழத்தில்
சிதைக்கப் பட்டோம்
சிரியாவில்
ஒடுக்கப் பட்டோம்

கதிராமங்கலம்
பற்றி எரிகிறது

கடுகளவு எதிர்ப்பைக் கூட
நெஞ்சில் பயம்
கொண்டுதாம்
பதிய வேண்டியுள்ளது

குமுறிக்கொண்டிருக்கும்
மனதினை
எதனைக் கொண்டு
சமன் படுத்துவது?

எங்கள்
சுவாசம் நிற்கப் போகிறது
சோற்றில் கூட
பெட்ரோலிய வாசமைய்யா...

எழுதியவர் : அருள்.M.வர்மன் (21-Nov-18, 2:39 am)
சேர்த்தது : அருள்Mவர்மன்
Tanglish : eriyum thuyaram
பார்வை : 116

மேலே