அழகிய தமிழ்

தமிழ், தமிழுக்கு நிகரேது /
அழகுக்கும், அன்புக்கும், பண்புக்கும் ,
நிகரில்லா கனிவுக்கும் ,
நம் சொல்லிலே வார்த்தையிலே
அதன் அழகினிலே விடை கிடைக்கும்
நம் நாவில் பிறந்து வரும் அன்புக் குழந்தையே
நாம் பாராட்டும் சீராட்டும் நம் தூய தமிழ் .

தன் ஒப்பற்ற இன்னமுதால்
தமிழ் சக்தி எனும் திடன் கொண்டு
நாவினிக்கும் நற்சொல்லால் நறுந்தேன் எனும்
சுவைகூட்டும் செந்தமிழால் இன்பம் குழைத்து
இனிதுவந்து பேசும் எங்கள் செல்லத் தமிழுக்கும்
அதன் அழகுக்கும் மேலான ஒன்றுண்டோ /

உலகில் எந்த அழகிற்கும் அளவு கோல் உண்டு
ஆனால் அளவிட முடியாத
அன்பெனும் பண்பெனும் அழகெனும் உணர்வில்
மென்மையும் மேன்மையும் உயர்ந்து நிற்கும் அழகோ அழகு
எங்கள் தங்கத் தமிழுக்கு உண்டு
தமிழ் தங்கத் தமிழ் அழகுக்கு மறுபெயர் தமிழ் .

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Nov-18, 8:33 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : alakiya thamizh
பார்வை : 548

மேலே