காற்றின் மாயம்
என் கைக்குள் வந்ததென்ன
என் கையைவிட்டு சென்றதென்ன
உன் முகம் அறிய ஆவல்தான்
நீ ஒரு யுகம் கூட நிற்பதில்லை
நீ சத்தம் இன்றி என்னை தொடுகிறாய்
முத்தம் இன்றி என் கன்னம் படர்கிறாய்
உன் முகம்பார்த்து பேசவேண்டும்
உன்னை பார்த்த முதல் நாளே இந்த ஆசை
நீ நடந்து வந்த கால்கள் எங்கே
நீ பறந்து வந்த இறகுகள் எங்கே
என்னை தேடிவந்து சேர்ந்துவிடு
உன்னை பார்க்கும் தேதி ஒன்று தந்துவிடு
நான் தேடி வரும்போது
நீ ஓடி ஒழிந்துகொண்டாய்
கூடிவரும் வேளையில்
என்னை ஏன் இழந்தாய்
நீ கோவப்பட்டு வந்ததென்ன
புது கோலம் செய்து சென்றதென்ன
தென்றலாய் ரசித்த என்னை
கந்தலாய் மாற்றிவிட்டாய்
கர்வம் ஒன்று வந்ததென்ன
என்னை கண்கலங்க வைத்ததென்ன
இக்கரைத்தேடி நான் வந்தேன்
நீ அக்கரை கடந்து போனதென்ன
க.அப்துல் பாக்கி