புயலின் வேட்டை

புயல் எனும் பெயரில்
புரட்டி விட்டு எட்ட போய்
வேடிக்கை பார்ப்பது புயலின் வாடிக்கை
புரட்டுவது சும்மா அல்ல
புடுங்கி அடுக்கி விட்டு போய் விடுகிறதே
ஊரில் நாட்டில் எந்த இடத்தை புயல் எட்டி பார்கிறதோ
அந்த இடம் நாசம்தான்

வீசும் காற்றல்ல புயல், அது அடிக்கும், சுற்றும் ,சுழற்றும்,
படு முரட்டுத் தனம் கொண்ட
இரக்கமற்ற அரக்க குணம் தாங்கிய மகா ராட்சஸன்.
கடல் நீர் ஆகாயம் காற்று சேர்ந்து
மக்களை, உயிரினங்களை, மரங்களை, வீடுகளை
ஒருசேரக் கொள்ளையிடும் அகோரக் காற்று

புயல் எனும் பெயரில்
உலகில் ஒவ்வொரு இடங்களையும் எட்டிப் பார்த்திருக்கும் இப்புயல்
தன் கோரத் தாண்டவத்தை நிறைவேற்ற
அமைதியுடன் காத்திருக்கும்
எல்லாம் அடித்து, நொருக்கி , வீழ்த்தி, அடியோடு சாய்த்து, ஐயகோ /
ஏனிந்த கொடுமை /
புயல் அடித்து ஓய்ந்த பின், ஏன் இந்த மயான அமைதி/

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Nov-18, 1:48 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 45

மேலே