நிலவும், அவளும்

பௌர்ணமி நிலவைக்கண்டேன்
தங்க நிலவின் அழகைப்பருகி
நிலவின் தன்னொளியில் மூழ்கி
குளித்தெழுந்தேன் உள்ளம் குளிர
உள்ளம் சொன்னது,' எழில் நிலவே
உன்னைத் தொட்டு உறவாட வேண்டுமென்று'
புதி சொன்னது,' தொடும் தூரத்தில்
நிலவும் இல்லை, தொட்டாலும்
அதன் அழகு புலனாகாது, அது வெறும்
கல்தான் என்பது தெரியும் உனக்கு' என்று

அவ்வளவில் கண்டேனடி பெண்ணே உன்னை,
நிலவாய்த் தெரிந்ததடி உன்முகம்,
அந்த தங்க நிலவாய் ;, நீ என்னவளல்லவா,
என்னருகே வந்தாய் , உன்னழகைப்பருகி
அதில் மூழ்கி குளித்தெழுந்தேன் அப்படியே
உன்னைக்கட்டி அணைத்து முத்தம் தந்தேன்,
நீயும் குளிர்ந்தாய் , நானும் குளிர்ந்தேன்
மகிழ்ந்தேன், அந்த நிலவையே தொட்ட
சுகமும் கண்டேனடி கண்ணம்மா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Nov-18, 8:28 am)
பார்வை : 510

மேலே