நம் டெல்டாவின் நிலை

இன்பம் இழந்து
இருளில் முழ்கியது...

சில நகரங்கள்!!!

உடமைகள் இழந்து
உயிர் காக்க ஏங்குகிறது...

பல மனங்கள்!!!

உண்ண உணவின்றி..
உடுக்க உடையின்றி..
படுக்க உறைவிடமின்றி..
குடிக்க நீரின்றி..
நடக்க பாதையின்றி..

தவிக்கின்றது ஜனங்கள்!!!

உயிரோடு சாய்ந்தன மரங்கள்..
உயிரற்று போனது விளைநிலங்கள்..
பாதுகாக்க இல்லை கரங்கள்..

நாம் உயிர் வாழ
உணவு கொடுத்தவர்களை
கண்டு கொள்ள யாருமில்லை!!!
கண்டு கொள்ள நேரமுமில்லை!!!

பாவம்;

உண்ண உணவளித்தவர்கள்
இன்று உணவில்லாமல் பட்டினியோடு இருகின்றார்கள்;

கண்களை மூடிக்கொண்டது அரசு!!
ஊடகங்களில் வரவில்லை நியுசு!!

எச்ச அரசியல்வாதிகளே!
ஒரு நாள்
காலம் நிச்சயம் பதிலடி தரும்
தாயாராகி கொள்ளுங்கள்..

வரலாற்றில் ஒரு சிதைந்த பக்கமாக இந்த டெல்டா பாதிப்பு இருக்கும்

பெரும்பாலும்
நாட்டின் மேல் இருக்கும் பற்று
நாட்டு மக்களின் மேல் இருப்பதில்லை!!!

நாடு வல்லரசு ஆக வேண்டாம்
ஒரு நல்லரசாக இருந்தால் போதும்

கஜா புயலினால் பாதித்த
மக்களுக்கு கரம் கொடுப்போம்!!!
விழிகளில் வடியும் கண்ணீர் துடைப்போம்!!!
டெல்டாவை மீண்டும்
மீட்டெடுபோம்!!!

❤ சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (24-Nov-18, 8:34 pm)
பார்வை : 695

புதிய படைப்புகள்

மேலே