கஜாவாம் கஜா

"கஜாவாம் கஜா".
========================================ருத்ரா


காதல் என்றால்
தென்றல் என்று தானே
பொருள்.
அது லட்சக்கணக்கான‌
தென்னைகளையும்
சடலங்களாக கிடத்தி
வெறித்தனம் செய்கிறதே.
மண்ணோடு மெல்லிய‌
மொழியில் வீசும் காதலின் மீது
கோரம் கொப்புளிக்கும்
இந்த காற்றுக்குப்பெயர்
"கஜாவாம் கஜா".
பேசாமல் இதற்கும் அவர்கள்
"ஆணவ‌க்கொலை" என்றே
வைத்திருக்கலாம்.

=======================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (25-Nov-18, 3:00 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 49

மேலே