ஓட்டு யாருக்கு

பாட்டி பணம் தந்தேனே
எங் கட்சிக்காரனுக்குத்தானே
ஓட்டுப் போட்ட ?

எல்லாக் கட்சிக்காரனுந்தான்
பணம் தந்தான் !
பின்ன யாருக்குன்னு ஓட்டு போடுது ?

கண்ண மூடிக்கிட்டு ஒரு பொத்தானை
அமுக்கினேன்

யாருக்கு விழுந்துதோ அவன் அதிர்ஷ்டசாலி
என்றாள் புத்திசாலி மூதாட்டி !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-18, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே