தவிப்பு

தாகத்திற்கு தண்ணீர் கேட்டதும் ஏனோ
தவிக்க எம்மை விட்டுவிட்டதும் ஏனோ
கண்ணீர் கடலில் ஆழ்த்தியதும் ஏனோ
கரை காணாமல் ஒதுக்கியதும் ஏனோ

இடிமின்னலாய் வந்ததும் ஏனோ
இம்சை அரசன் ஆனதும் ஏனோ
தாகம் கொண்ட பயிர்களையும் ஏனோ
தரணிக்கு தாரை வார்த்ததும் ஏனோ

பேரிரைச்சல் கொண்டதும் ஏனோ
பெரு மரங்களை கொன்றதும் ஏனோ
எங்கள் வாழ்வை குலைத்ததும் ஏனோ
நாங்கள் வழியிழந்து தவிப்பதும் ஏனோ

எழுதியவர் : உமாபாரதி (26-Nov-18, 10:16 pm)
சேர்த்தது : உமா பாரதி
Tanglish : thavippu
பார்வை : 2219

மேலே