உன் பயணம்

அழகான பெண்ணே
ஆளப்பிறந்த சக்தியே...
உன் பணிவு
உலகில் உன்னை உயர்த்தும்..

உன் கண்கள்
கனவுகளை மட்டுமல்ல
சாதனைகளையும்
காணப்போகின்றன...

பயம் என்ற
ஒன்றை துரத்தி
அடித்து ஓடு..
துணிவை ஆயுதமாக்கு..

உன் பெண்மையை
தகர்க்க முற்படும்
மிருகங்களை கண்டால்
சட்டத்தின் முன் நிறுத்து..

அறிவை தேடி
உன் பயணம்
தொடரட்டும்..உன்
வல்லமை வளர்த்திட..

எழுதியவர் : (27-Nov-18, 3:55 pm)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
Tanglish : un payanam
பார்வை : 57

மேலே