வந்து விடு தோழனே

உன்னை பிரிந்து துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
இருள் சூழ்ந்து கொள்கிறது -
என்னை
இருளகற்ற யாரும் இல்லை
உன்னை விட,
உன் கண்கள் தானே
எனக்கு தீபம்

கோடை வெயிலும்
வாடைக்காற்றும்
இப்படி வாட்டியதில்லை
உன் பிரிவு
இயற்கையை வென்றுவிட்டது
போலும்.

என் அறையின்
நான்கு சுவர்களும்
இரும்புச் சிறைகளாகின்றன.
அந்த சாளரத்தின் வழியே வரும் இளந்தென்றலும்
என்னை சுட்டுத் தீக்கின்றது..
தென்றல் உரசிச் செல்லும்
என் தோட்டப் பூக்களும் வாடி நிற்கின்றன...
என்னைப் போல் அவையும்
பிரிவுத் துயர் அனுஷ்டிக்கின்றன.

நீண்ட இந்த இரவுகளில்
விழிகள் தானாக
விழிக்கும்..
அழகிய இந்த பகல் நேரங்களில் என் விழிகள்
நான் அறியாமல் அழுகின்றன.

எப்போதும் உன்னை வருத்தி
என்னை காக்க நினைப்பாய்
இப்போது நான் வருந்துகிறேன் நீ எங்கே?
கவிதைகள் சுவையாக வாழ்க்கை சுமையாகிறது..

உன்னுடன் சேர்ந்து எழுதி ரசித்த கவிதைகள் என்னை கேட்கின்றன.
' எங்கே உன் தோழன்' என
என்ன பதில் சொல்வேன்..

என் தோழனே
என் சுவாசமே
என் வாசமே
நீ எங்கே?

உன்னை
கொஞ்சிக் கேட்பதா
கெஞ்சிக் கேட்பதா
இந்த பிரிவை பிரித்து விடு

மீண்டும் என்னை வந்து சேர்ந்து விடு.
மீள என் உயிர் பெற்று தந்துவிடு..

விடியலை விருந்தாக மாற்றிடு
மனதுக்கு மருந்தாக வந்து விடு
தோழனே!

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (1-Dec-18, 9:51 am)
பார்வை : 98

மேலே