பாவ நிவர்த்தி

புத்தூர், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் கிழக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கும், ஆவரங்காலுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளது. பருத்தித்துறை வீதி வழியாக யாழ்ப்பாணத்திலிருந்து ஏறத்தாழ 15 கிமீ தொலைவிலும், பருத்தித்துறையில் இருந்து 18.5 கிமீ தொலைவிலும் உள்ளது. சிறுப்பிட்டி, நவக்கிரி, ஆவரங்கால், வாதரவத்தை ஆகிய ஊர்கள் புத்தூரைச் சுற்றி அமைந்துள்ளன. புத்தூரில் நான்கு பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் பெரியது புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மிக முக்கிய கல்லூரியகும் ஆகும். மற்றவை புத்தூர் இந்து ஆரம்பப் பாடசாலை, புத்தூர் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சிறீ பஞ்சசீல வித்தியாலயம் என்பன.

செல்வநாதனின் தந்தை பத்மநாதன் வண்டில் மாடு வைத்து பிழைக்கும் புத்தூர்வாசி.அரையேக்கர் நிலமும் ,ஒரு குடிசையும் தான் அவரின் சொத்து பல சாதிமக்கள் வாழும் புதூரில் ஒரு காலத்தில் இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்துக்கு மதம் மாறி அரசிடம் சலுகைகள் பெற்றவர்கள் சிலர். அவர்களில் பத்மநாதனின் சாதியைச் சேர்ந்தவர்கள் பலர் அவரின் சாதியை சேர்ந்தவர்கள் சிலர் பத்மநாதனை அணுகி அவரின் பிள்ளைகளின் எதிர்காலத்தின் நலன் கருதி மதம் மாற அவரை வற்புறுத்தியும் பத்மநாதன் மறுத்து விட்டார்.

.புத்தூர் வாசிகள் சாதி வேற்றுமை காட்டி சமூகத்தில் ஒரு சிலரை ஒதுக்கிவைத்ததால் இந்த மதமாற்றம் நடந்ததுண்டு மதம மாறியவர்கள் சிலருக்கு காணியும் அரசில் வேலையும் கிடைத்தது. புத்தூருக்கு.இம் மத மாற்றம் அவப்பெயரைக் .கொண்டுவந்தது . ஊரில் ஏற்பட்ட சாதி கலவரத்தில் பத்மநாதன் தாக்கப்பட்டு இறந்தார்.

அவரின் மகன் செல்வனாதனையும், மகள் செல்வியையும் வளர்ப்பது அவர்களின் விதவை தாய் செல்லம்மாளின் பொறுப்பில் விழுந்தது படீப்பில் செல்வனும், செல்வி கெட்டிகாரர்கள்;. அவர்கள் இருவரும் ஆரம்பக் கல்வி படித்தது சிறீ பஞ்சசீல வித்தியாலயத்தில் அதன் பின் உயர் படிப்பு புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரியில் . அவர்களின் தந்தை இறக்கமுன் தன் இரு பிள்ளைகளும் படித்து நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்றே பத்மநாதன் விரும்பினார். .

திருமண வாசலில் நிற்கும் தங்கைக்கொரு அண்ணன் செல்வநாதன்
படிப்பிலோ விண்னன் தன கடமையைச் செய்யவும் ,
தன் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும்
குடும்ப விடிவுக்காகவும் இரவு இரவாகக் கண்விழித்து படித்தான் செல்வன்

உயர் தர ஏ லெவல் ( Advance Level exan) பரீட்சையில் சோமாஸ்கந்த கல்லூரியில் படித்து திறமையாக சித்தி அடைந்தான் நான்கு பாடங்களிலும் அவனுக்கு கிடைத்து நான்கு “ஏ” க்கள் வடமாகணத்தில் அதிக புள்ளிகள் கிடைத்த மாணவன் செல்வன். அதோடு பல்கலைக்கழகதில் படிக்க அவனுக்கு புலமைப்பரிசு. கிடைத்தது. ஊரே அதை அறிந்து பெருமைப் பட்டது. அவன் கூடவே படித்த இரு உயர் சாதி மாணவர்களுக்கும் பல்கலைக்கழகதில் படிக்க அனுமதி கிடைத்தது. அவர்களின் பெற்றோர்கள் வசதியுள்வர்கள் ..


செல்வனின் நற்செய்தி கேட்டு பூரித்தது கல்லூரி. ஆசிரியர்கள் அவனைப் புகழந்தனர் அவனின். தாய் செல்லம்மாள் மனமகிழ்ந்தாள் அண்ணனின் சாதனையை பெருமைப்பட்டாள் அவனின் தங்கை செல்வி

தன் காணியை அடகு வைத்து செல்வனை பேராதனை பல்கலைக்கழகத்தில்
படிக்க அனுப்பினாள் செல்லம்மாள்

செல்வன் தெரிந்தெடுத்தது பொறியியல் துறை. சற்று பலவீனமான இருதயம் உள்ள செல்வன் எந்த அதிர்ச்சியையும் இலகுவில் தாங்கிக் கொள்ள மாட்டான் பல்கலைக் கழகத்தில் முதல் நாள் அனுபவம் செல்வனுக்கு ஏன் அங்கு படிக்க வந்தோம் என்ற வேறுப்பை கொடுத்தது. எல்லாம் புது முகங்கள் . தன ஊரில் இருந்து வந்த ஊயர் சாதி இரு மாணவர்கள் கூட அவனோடு பேசவில்லை. அவனைத் தெரியாதவர்கள் போல் நடந்தார்கள் அவர்கள் இருவரையும் மற்றைய சீனியர்கள் வித்தியசமாக நடத்தினர்கள். அவர்களை செல்வனை கிண்டல் செய்த அளவுக்கு அவர்களை கிண்டல் செய்யவில்லை. அதற்கு எதிர்மாறாகப், பயந்து நின்ற செல்வனைப் பகிடி வதை செய்தார்கள் .

அவனுக்கு சீனியர்கள் புதிய மாணவர்களுக்கு செய்யும் பகிடி வதை எனும் விளையாட்டு புதிது. அதுவும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து வந்த செல்வனால் நகர்புறத்தில் இருந்து வந்த மாணவர்களின் சேஷ்டைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை சீனியர்களின் பொறியில் சிக்கிய அவன் துடிதுடித்துப் போனான் போக்கிரிகளுக்கு அது பொழுது போக்கு செல்வனின் கண்ணீர் சீனியர்களுக்கு குளிர்ச்சி.

தான் தேக நலம் குன்றியவன் அதனால் தன்னை விட்டு விடும்படி கெஞ்சினான் செல்வன் . கேட்கவில்லை அவர்கள். தள்ளாடி விழுந்தான் செல்வன் அவனை தட்டி உசுப்; கல்நெஞ்சர்கள்.

“ ஏய் இருபது தடவை குந்தி எழும்பு . பத்து தடவை குத்துக்கரணம் அடி”. இப்படி பல கடளைகள் சீனியர்களிடம் இருந்து பறந்தன
.
அவர்கள் சொன்னபடி செய்ததினால் மூர்ச்சித்தான் செல்வன் முகத்தில் தெளித்தனர் நீரை. கைதட்டல்கள்,. சிரிப்புகள், கொக்கரிப்புகள். விசில் அடிப்புகள் ஊளைகள் அந்தப் பின்னணியில், செல்வன் அரை நிர்வாணத்தில் தொடர்ந்தான் பகிடி வதைகளை

வதை தாங்கமுடியாமல் மரம் போல் நிலத்தில் அசையாது கிடந்தான் செல்வன் நிலத்தில் கிடந்தவன் உடலில் அசைவில்லை. அவர்கள் அவனை விடவில்லை.

“ஏய் நீ பாசாங்கு செயாதே எழும்பு ஏன் இந்த ஜாலம்?”
கட்டளைகள் பறந்தன. கட்டையாகக் கிடந்தான் அவன்.

கீழே கிடந்தவனை உசுப்பினர் , கிள்ளினர் , உதைத்தனர். அவன் உடல் அசைவில்லை. அவன் உயிர் அங்கில்லை
.

சீனியர்கள் பதறினர். பயந்;தனர்.
பஞ்சாய்ப் பறந்தனர். “நான் இல்லை, அவன் தான் செய்தவன்
எனக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியும்” இப்படி செய்த குற்றங்கள்
கைமாறின செய்த குற்றத்தில் இருந்து தப்புவதற்காக.
குற்றவாளிகள் பிடிபடவில்லை சட்டம் மொளனமானது
.
செய்தி கேட்டு துடித்தாள் தாய் பதறினாள் தங்கை கண்ணீர் விட்டது கல்லூரி ஒப்பாரிவைத்தனர் இனத்தவர்கள். வதைத்தவர்களைத், திட்டித் தீர்த்தனர் உள்ளூரார்
.
காலத்தோடு கரைந்தது கவலை புத்தூரில் சாதனை படைத்த செல்வனின் சாவின் நினைவுகள் மறைந்தன
.
வருடங்கள் உருண்டன. இறந்தவன் தங்கை செலவியி திருமணம் சீதந்தால் பின் தள்ளி போயிற்று.

அன்றொருநாள் எதிர்பார்த்த விதமாக
கொழும்பில் இருந்து செல்வியை சீதனம் இல்லமல் திருமணம் செய்ய தேடிவந்தான் ஒருவன். வந்தவன் படித்து பட்டமும் பெற்றவன்
அவன் அழகுக்கு குறைவில்லை. சொத்துக்கும் அதிபதி பெற்றோருக்கு ஒரே மகன்
செல்லம்மாள் மகளுக்கு வரப் போகும் மாபிள்ளையை பற்றி விசாரித்ததில் பெடியன் நல்லவன். இரக்க சுபாவம் உள்ளவன். அரசில் நாள் சம்பளத்தில் வேலை சாதி பார்க்காமல் செல்வியை முடிக்க வந்திருக்கிறான்
.
கொடுத்து வைத்தவள் செல்வி .” வந்தவன் குடும்பத்தை அறிந்தவர்கள் சொன்னார்கள்


அவர்களுக்குத் தெரியுமா வந்தவன் யாரென்று?
செல்ம்மாளுக்கும் செல்விக்கும் தெரியாது வந்த மாப்பிள்ளை யார் என்று?


வந்தவன் செல்வியின் அண்ணனை
வதைத்த சீனியரா கூட்டத்தின் தலைவன் கொழும்புராயல் கல்லூரியில் படித்தவன். தனவந்தரின் மகன். தான் செய்த குற்றதாயி நிணைத்து வருந்தி அவன்தூங்காத இரவுகள் இல்லை . இறந்த செல்வனைப் பற்றி விசாரித்து ஒரு முடிவுக்கு வந்தான் மனம் குறுகுறுத்தது நடந்த சம்பவம் அவன் மனதை விட்டுகலவில்லை

சீனியர்களின் கூட்டத்துக்கு தலமை தாங்கி அதன் விளைவை சந்தித்தவன் குற்றத்தை மறைத்து தப்பித்துக் கொண்டவன் அவன்

இப்போ குற்றம் புரிந்தவன் பட்டம் பெற்று அரசில் என்ஜினியர் வேலை . இறந்தவன் இருந்திருந்தால் அவனும் என்ஜினியராகியிருப்பான். அவனின் தங்கை மணமும் நடந்திருக்கும்

குற்றம்புரிந்தவன் சிந்தித்தான் மனதில் இருந்து தான் செய்த பாவத்தை
அவனால் மறக்க முடியவில்லை தன் பாவ நிவர்த்திக்காக.
குற்றம் புரிந்தவன் எடுத்த முடிவு அது. செல்வி அறிவாளா அதைஅறிந்தால் அவனை முடிக்க சம்மதிப்பாளா ? அல்லது அவனை மன்னித்து மணம் முடிப்பாளா? வாசகர்களிடம் தீர்ப்பை விட்டு விடுகிறேன்
****
( யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (2-Dec-18, 1:34 am)
Tanglish : paava nivarthi
பார்வை : 137

மேலே