குடிசை

புயல் காதலனோடு
ஓடும் பெண்

அரசு வீணாக்கும்
மழைநீரை குடிசைகள்
சேமிக்கின்றன

குடிமகன்கள் குடித்த மகன்கள்
வசிப்பதால் இது குடிசை

வயிற்றுக்கு உணவின்றி
உயிர்வாழும் மகான்கள்
வசிப்பது குடிசை

குடிசை இது மனிதன்
கட்டிய கூடு இங்கே குருவிகளும்
வாழ்கின்றன

குடிசை
தீப்பிடித்தால் மட்டும் எரிவது
ஏழையின் வயிறு
தீயின்றி எரிவது

இரவில்
படுத்துக்கொண்டே நிலவை
ரசிக்கலாம்

பகலில் பகலவன் வந்து
துயில் எழுப்பலாம்

கூரையின் வெளிச்சம்
ஏழைகளின் கடிகாரம்

ஏ சூரியனே ஓசோனில்
ஓட்டையிட்டு நுழைந்தாய்
இவன் ஓலையிலுமா நுழைவது?

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (2-Dec-18, 8:09 pm)
Tanglish : kudisai
பார்வை : 142

மேலே