ஆயுத எழுத்து

ஆண்
பெண் படைப்பு
பசி நிகழ்த்தப்பட்டது


உணவு
உடை தேவைகள்
இருப்பிடம் விதிக்கப்பட்டது


ஆட்சி
அதிகாரம் வரைமுறை
அரசியல் திணிக்கப்பட்டது


ஆயுத எழுத்தாய்
சுழற்சி
மனித வாழ்க்கை!


போட்டி
பொறாமை சுயநலம்
வன்முறை ஏற்பட்டது


பணம்
பதவி போதை
புகழ் உருவாக்கபட்டது


கனவு
கற்பனை பேராசை
அழிவு தேடிக்கொண்டது


ஆயுத எழுத்தாய்
சுழற்சி
மனித வாழ்க்கை!

எழுதியவர் : நா.சேகர் (3-Dec-18, 8:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ayutha eluthu
பார்வை : 93

மேலே