என்ன குற்றம் செய்தேன் என் அன்பே
குற்றம் செய்தவரை மட்டுமே சிறையில் அடைப்பர்.
நான் என்ன குற்றம் செய்தேனடா ?
கைபேசியில் என்னை கைது செய்து
என் எண்ணோடு சேர்த்து என் மனதையும்
சிறையில் அடைத்து விட்டாய்!
உன்மேல் அளவு கடந்த அன்பு வைத்தது குற்றமா?
அட்வகேட் அன்பே என் விஷயத்தில் ஜட்ஜாய் மாறியது ஏனோ?
இருக்கட்டும் பரவாயில்லை இத்தண்டனை சரிதான்.
சிறைவைப்பதே திருந்துவதற்குத்தானே!
நானும் திருந்தி கொண்டிருக்கிறேன் மெது மெதுவாய்,
என்ன...கைபேசியை காணும் போதெல்லாம்
சித்ரவதைபட்டு சிதைந்து போகிறது என் மனம்.
சிறையில் நான் படும் சித்ரவதை கேளாயோ!
என் உள்ளத்தை சிலையாக்கி (கல்லாக்கி)
உன் நினைவுகளால் வடிவம் கொடுத்து
என் கண்ணீரால் அபிஷேகம் செய்கிறேன் நித்தமும்!
என்றோ ஓர்நாள் உயிர்வந்து வரம் கொடுக்குமென்ற
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் கண்ணாளா!

