கனவிலே நடந்த கருணை கொலையடி
என் ஆசை கண்ணன் என் அருகினில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ இதழ் பதித்தான் !
நிலவின் ஒளியில் என்னை துயர் செய்தான்!
என் மனதுருக ஏதேதோ கவிதை சொன்னான்!
சேர்ந்தோம் மகிழ்ந்தோம் உறவாடி !
என்னை மீட்டேன் என் மாமாவிடம் போராடி !
கண்விழித்து பார்த்தேன் பொழுது விடிந்ததடி !
எல்லாம் கனவிலே நடந்த கருணை கொலையடி!
ஆம் என் மாமன் எனை விட்டு எங்கோ சென்றானடி!
இதுவரை ஆழ்ந்த உறக்கமே என் கண்ணில் இல்லையடி!

