வாழ்வியல் மாற்றம்

அங்கு...

உறவுகளிடம் மனம்விட்டு அளவளாவ
எந்த ஓர் விஞ்ஞானமும்
தேவையில்லை....

தாவித் தாவி வெற்று வெளியில்
விளையாடும் பிள்ளைக்குட்டிகளுக்கு
எம் சிறார்களை போல்
தொல்லையில்லை..

தங்களது தேவைகளை நிறைவேற்ற
தீர்மானங்களோ, போராட்டமோ
அவசியமில்லை....

நிமிடத்திற்கு நிமிடம் பகிர்ந்துகொள்ள
அன்மைச்செய்திகள்
அங்கில்லை....

இயற்கையை மறுத்து, மறந்து வாழும் வாழ்விலிருந்து விலகி..
இயற்கையின் மடியில் இனிதே வாழும் நிறைவு...

இவையாவும்
வனவாழ் விலங்குகளுக்கே
சாத்தியம்!!!

எழுதியவர் : காதம்பரி (6-Dec-18, 10:02 pm)
சேர்த்தது : காதம்பரி
Tanglish : vaazviyal maatram
பார்வை : 0
மேலே