முதிர்ச்சி --- நையாண்டி மேளம் 2

முதிர்ச்சி


இளம் வெண்டைக்காய்
தேடும்

விரல்கள் முதிர்ச்சி ;

தாறுமாறான
கேள்விக்கும்

தடுமாறா
பதில் முதிர்ச்சி ;

கண் ஈர்க்கும்
பெண் எதிரில்

கவனிக்காத
பார்வை முதிர்ச்சி ;

பெற்றவர் தேர்வில்

மணம் முடிக்கும்
இளைஞன் முதிர்ச்சி ;

நேற்றைய காதலியை
வாழ்த்தும் நெஞ்சம் -

இன்று சமூகம்
கைகூப்பும் முதிர்ச்சி !

எழுதியவர் : Dr A S KANDHAN (7-Dec-18, 12:37 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 37

மேலே