அவள் அழகை விட அழகு தமிழ் அவளை விட அழகு

அவள் அழகை விட அழகு
தமிழ் அவளை விட அழகு
தலைப்பிலே தொடங்கியது
ஒரு கவிதை ......

அவளா தமிழா இரண்டும் மூன்றேழுத்து
தமிழ் வல்லினம் மெல்லினம் இடையினம்
அவள் பார்வை வல்லினம்
அவள் இடை மெல்லினம்
அவள் புன்னகை இறைவனுக்கும்
மனிதனுக்கும் இடையினம் .................

தமிழும் அவளும் ஒரு இனம்............

எப்படி எழுதினாலும்


அவளுக்கும் தமிழுக்கும்
உவமை தேடினேன்
உவமையும் ஊமை...........

பேய்க்கரும்பன்கோட்டை அகிலன்

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (7-Dec-18, 11:08 am)
சேர்த்தது : AKILAN
பார்வை : 89

மேலே