தமிழ் பிறந்ததே அழகு

தமிழ் அவளை விட அழகு
அவளின் அழகு நிரந்தரமற்றது
தமிழின் அழகோ கொள்ளை அழகு
அவளுக்கும் தமிழுக்கும் அழகில் போட்டியா /
ஒருபோதுமில்லை ,
தமிழ் அழகு, தமிழ் எழுதுவதில் அழகு,
தமிழ் பேசுவதில் அழகு ,
தமிழ் கொடுக்கும்
அன்பிலே ,அணைப்பிலே அழகு
ஆதரவிலே, மென்மையின் உச்சரிப்பிலே அழகு
யாவற்றையும் வென்றது அழகு தமிழ்,
அனைத்திலும் அழகு தமிழ்
அழகென்றால் அழகு தமிழே தமிழ்,
தமிழ் உலகில் பிறந்ததே அழகு,
அது ஆதி மொழியாய் வந்ததே அழகு,
அதை விரும்பி ஏற்றுக் கொண்ட தமிழனும் அழகு
தமிழின் அழகை சொல்லும் போது ,
இனிமை தித்திக்கின்றதே
தமிழா/ தமிழால் நீ உலகிலே உயர்ந்தவன்
உனக்கு நிகர் யாருமில்லை
தமிழனுக்கு அழகு தமிழ் ,
தமிழுக்கு அழகு தமிழன் ,

எழுதியவர் : பாத்திமாமலர் (7-Dec-18, 11:30 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 1747

மேலே