ஏகாந்த மனிதரைக் காணோம்

மனிதரைக் காணோம் ஐயா மனிதரைக் காணோம்
மக்களை அரவணைத்துச் செல்லும்
பரந்த மனமிக்க மனிதரைக் காணோம்
புனிதராய் இருக்க வேண்டாம் - இப்போது
மனிதனாய் இருந்தாலே போதும்
அந்நியரைப் போலே இங்கு
அணி அணியாய் பிரிந்து கிடக்கும்
அனைவரையும் அரட்டிக் கூட்டி
அவரவருக்கான வார்த்தையில் பேசி
அத்தியாவசிய தேவைகளை செய்து
அடுத்தத் தலைமுறை எழுச்சி காணச்செய்ய
சிறந்த மனிதரைக் காணோம்
சேவையே தேவையில்லை என - மக்களின்
எண்ணத் தீபத்தை மாற்ற எண்ணம் கொண்ட
ஏகாந்த மனிதரைக் காணோம் ஐயா காணோம்
பணமே பிரதானம் என பம்முகின்ற
பார்வேந்தர்களை பாறை இடுக்கில்
புதைக்கும் எண்ணம் கொண்ட
பலமிக்க மனிதரைக் காணோம் ஐயா காணோம்
பைய காத்துக் கொண்டுள்ளோம்
பயன் என்றேனும் ஒரு நாள் வருமென்று.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (7-Dec-18, 8:03 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 68

மேலே