பெண் கவிதை

மழை பொழிகையில்
இருநிலவுகள் ஒளிருது
இங்கே இங்கே

இலை மறைவினில்
காய்கனிகளும் படபடத்தன
இங்கே இங்கே

இதழ் சிரிப்பினில்
இமைகள் துடிப்பினில்
பட்டாம்பூச்சிகளும் பறந்தன
இங்கே இங்கே

சிலை அழகினில்
சித்தம் தொலைந்திட
மாலைப்பொழுதினில் மையல்
கூடிட தனிமையும்
கவிதையாய் நடைபோடுது
இங்கே இங்கே

சுவாசச்சூடு எல்லை மீறிட
கட்டுபாடுகள் கட்டவிழ்ந்திட
நேச புன்னகை
நெருங்கிட நெருங்கிட
இரவையே நாடுது
பொல்லாத கனவுகள்
பகலென்பதையும் மறந்தபடி
இங்கே இங்கே

ஒருசுற்று பெருத்த
தலையணையின் பாசம்
யானை பலமாய் இன்றும்
வீழ்த்தியதே விரும்பிய
என்னையே என்னையே!!!!!!

எழுதியவர் : மேகலை (10-Dec-18, 5:05 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : pen kavithai
பார்வை : 633

மேலே