பறவையின் சோகம்

நான் . நான் . நான் . நான் .
வான் . வான் . வான் . வான் .
பறக்கிறேன் .
பறந்து உலகை அறிகிறேன் .
நான் . நான் . நான் . நான் .
ஊண் . ஊண் . ஊண் . ஊண் .
தேடித்தான் தேகங்கள் குலைகிறேன்.

என் சிறகினை பிடித்து கூண்டிலே அடைத்தீரே .
என் உயிரினை பிரித்து கறியென சுவைத்தீரே .
என் உலகத்தை அழித்து உடம்பினை வளர்த்தீரே .
மானுட பிறவியே உன்னை நினைத்து நான் அழுகிறேன் .
துயரினில் நனைகிறேன் .

வளர்ச்சி என்று கருதி பெரும் அழிவின் விளிம்பில் நிற்கின்றாய் .
காற்று தரும் மரம் அழித்து அதில் காசு மட்டும் காண்கின்றாய் .

மரங்களின்றி மழையும் இல்லை எங்கள் உலகம் நிலைக்கவில்லை .

காரணம் நீயடா .
உன் மூளையை கழுவடா .

மரங்கள் இன்று டவரானது தவறான பாதைக்கு விளக்கானது .
தவறெல்லாம் சரியானது .
எங்கள் தாய் மொழியும் பிழையானது .
இரவெல்லாம் ஒளியானது .
எங்கள் இன்பம் எல்லாம் இருளானது.

கூடு கட்டி வாழ்ந்தோமே உன் போல் வீடு எங்கும் கேட்டோமா ?
பழத்தை மட்டும் உண்டோமே உன் போல் பணம் காசு கேட்டோமா ?

அழிவு மட்டும் நேர்ந்ததே .
எங்கள் குலமே இன்று சரிந்ததே .
அந்த வானம் என்னை தேடுதே .
ஆனால் நீயோ திருந்தவில்லை .
எனக்கும் உன்னை பிடிக்கவில்லை .

நான் . செல்கிறேன் .
நான் . செல்கிறேன் .
நான் . செல்கிறேன் .

எழுதியவர் : M. Santhakumar . (10-Dec-18, 9:53 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : paravaiyin sogam
பார்வை : 151

மேலே