கானகமும் சோலைவனமே

வானளாவிய மரங்கள்
கானம் அளாவிய சோலைகள்
பசும் புல்தரைகள்
புகுந்து விளையாடும் விலங்குகள்
எங்கும் பறவைகளின் இனிய ஓசைகள்
இயற்கையின் இன்பம் அங்குதான்
குறைவின்றி தென்படுகிறது

வேட்டையாடும் மனிதர்களின்
நிசப்தங்கள் அதனூடே
அவர்களின் வேட்டு சத்தங்கள்
இருள் அந்த அழகிய கானகத்தை கவ்வுமுன்
மனிதன் அவ்விடத்தை விட்டு
விலங்குகளின் கண்ணில் சிக்காது
ஊருக்குள் போய் விட வேண்டும்
இதுவும் ஒரு போராட்டமே

உண்மையில் இது இளைஞர்களின்
ஒருவித சாகசம் தான்
அனுபவிக்கும் வயதில் பயம் என்பது துச்சம்
வேட்டையாடி விளையாடுவது
இயற்கையுடன் கலந்து மகிழ்வது
இன்பத்தில் தனிரகம் தான் ,
கானகமும் கண்கொள்ளாக் காட்சி என்பது
அனுபவிக்கும்போது உணர முடிகின்றது
கானகத்தை காரிருள் சூழும் முன்பு
நோக்குமிடத்து
அதுவும் கண்கவரும் சோலை வனமே

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Dec-18, 11:26 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 156

மேலே