நீ நான் பேருந்து நிலையம்

காத்திருப்பு என்னவோ
அதே பேருந்து நிலையத்தில் தான்!
இருந்தும் சில வேறுபாடுகள்........

அன்று நீ.......
இன்று நான்......

நான் வருவதால் காத்திருந்தாய் நீ........
நீ வரப்போவதில்லை என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன் நான்........

கையில் எனக்கான பரிசுடன்
காத்திருந்தாய் நீ.....
நெஞ்சம் முழுதும் உனக்கான
காதலுடன் மட்டும் காத்திருக்கிறேன் நான்.........

ஐந்து நிமிட சந்திப்பிற்காய் காத்திருந்தாய் நீ........
அதே ஐந்து நிமிடத்திற்காய் காத்திருக்கிறேன் நான்........
உன் நினைவோடும்
அசைவின்றி தூங்கும் கடிகார முட்களோடும்!

எழுதியவர் : சோட்டு வேதா (13-Dec-18, 2:37 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 104

மேலே