ஆள்காட்டி விரல்
இவர்களுக்கு அவர்களை
பரவாயில்லை என்று
நினைத்து கன்னத்தை
தாங்கியது ஒரு கை
வெள்ளை சட்டை
வெள்ளை வேட்டி
பார்த்ததும் கும்பிட்டது
இரண்டு கை
கன்னத்தை
தாங்கிய போதும்
கும்பிடும் போதும்
உயர்ந்திருந்த கை
ஓட்டுக்கு காசு என்றதும்
தாழ்ந்தது
தன்மானம்
நேர்மை
ஜனநாயகம்
அறிவு
என்ற நான்கு
விரல்களும்
ஒளிந்துக்கொண்டன
வறுமை என்ற
ஒற்றை ஆள்காட்டி விரல்
மட்டும் வாக்களித்தன......................